நகர்மன்ற பெண் தலைவர் 18 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக ஒப்பந்ததாரர் ஆணையரிடம் புகார் அளித்து இருக்கிறார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள நெல்லியாளம் நகராட்சியின் தலைவராக சிவகாமி செயல்பட்டு வருகிறார். இந்த நகராட்சியில் ஒப்பந்தப் பணிகளை எடுத்து செய்து வரும் ஒப்பந்ததாரர் ராயன், சிவகாமி லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக நகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தார்.
அதில் கடந்த மே மாதம் சிவகாமி அவசர தேவைக்காக ரூபாய் 2 லட்சம் தன்னிடம் கடனாக பெற்றதாகவும், ஆனால் அதனை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் தனக்கு லஞ்சமாக ரூ 18 லட்சம் தர வேண்டும் என சிவகாமி மிரட்டல் விடுப்பதாகவும் ராயன் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக விளக்கமளித்த சிவகாமி, ராயனிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விட்டதாகவும், அவரது பணிகளில் தரமில்லாத காரணத்தினால் அவரை பிளாக் லிஸ்டில் வைக்க நடவடிக்கை எடுத்ததால், பழி வாங்கும் நோக்கில் ராயன் செயல்பட்டு வருதாக கூறி இருக்கிறார்.நகர்மன்ற தலைவர் சிவகாமி திமுகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..