நெல்லை சாதிய கொடூரம் - "முதல்வர் அவ்வளவு எளிதில் விடமாட்டார்" - சபாநாயகர் ஆவேசம்

Update: 2023-11-03 12:02 GMT

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடப்பதாகவும், யார் தவறு செய்தாலும் தண்டனை நிச்சயம் என்றும், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மணிமூர்த்தீஸ்வரத்தில், சாதி ரீதியில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இருவர், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இருவரையும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, சிகிச்சை தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்