கடந்தாண்டை கண்முன் காட்டி மிரட்டிய அசுர மழை.. மிதக்கும் காட்சி.. அரண்ட நெல்லை
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்தத மழையால், பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீர் சூழ்ந்தது. மருத்துவமனைக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால், நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மழை நீரை வெளியேற்ற மாநகராட்சியில் இருந்த வந்த மோட்டார் லாரியும், மணலில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன், சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.