வீடு திரும்பாத பெண்... தோட்டத்தில் கண்ட கொடூர காட்சி - குலைநடுங்கி போன உறவினர்கள்
தோட்டத்திற்கு சென்ற மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அடுத்துள்ள புலவன் குடியிருப்பை சேர்ந்தவர் பொன்னம்மாள். வயது 78. சம்பவத்தன்று தோட்டத்திற்கு சென்ற பொன்னம்மாள் வீடு திரும்பாததால், உறவினர்கள் அவரை தேடியுள்ளனர். அப்போது தோட்டத்திற்குள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், மூதாட்டி சடலமாக் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், நகைக்காக மூதாட்டி கொலையா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.