நெந்லையில், அரசுப் பேருந்தில் ஏற முயன்ற பயணியை தகாத வார்த்தைகளில் பேசி, நடத்துநர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் இருந்து திருநெல்வேலி டவுன் நோக்கி புறப்பட்ட பேருந்தில், பயணி ஒருவர் மூட்டை முடிச்சுகளுடன் ஏற முயன்றார். அப்போது, நடத்துநர் தகாத வார்த்தையில் பேசியதுடன், அவரது கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு நிலவியது.