``பாரதிக்கு இந்த நிலையா..?'' கொந்தளித்த நெல்லை MP... பறந்த போன் - பரபரப்பு காட்சி

Update: 2024-09-11 16:16 GMT

நெல்லையில் பாரதி சிலைக்கு அணவிக்க வந்தபோது, வளாகம் குப்பை கூளமாக இருந்ததால் காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் அதிருப்தி அடைந்து, மாநகராட்சி ஆணையரை கடிந்து கொண்டார். மகாகவி பாரதியாரின் நினைவு நாளை ஒட்டி, ராபர்ட் புரூஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர், நெல்லை சந்திப்பு அருகில் உள்ள பாரதி சிலை வளாகத்திற்கு மாலை அணிவிக்கச் சென்றனர். அப்போது, வளாகம் குப்பை கூளமாக இருந்ததால் மாநகராட்சி ஆணையரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராபர்ட் புரூஸ் கடிந்து கொண்டார். வளாகம் ஒரு வாரத்தில் புதுப்பிக்கப்படும் என்று ஆணையர் கூறியபோது, ஒரு வாரத்தில் சீரமைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சி சார்பில் வளாகம் புதுப்பிக்கப்படும் என்று ராபர்ட் புரூஸ் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்