அன்று தனியாக எதிர்த்து நின்ற தமிழகம்...இன்று நாடே வெடிக்கும் போராட்டம் - களமிறங்கிய ராகுல், மம்தா.

Update: 2024-06-29 07:07 GMT

அன்று தனியாக எதிர்த்து நின்ற தமிழகம்

இன்று நாடே வெடிக்கும் போராட்டம்

களமிறங்கிய ராகுல், மம்தா..திணறும் நாடாளுமன்றம்

தமிழக சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்த நீட் எதிர்ப்பு விவகாரத்தில் நடப்பது என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு

பெரும்பாலும் தமிழகம் மட்டுமே எதிர்த்த நீட்டை, இன்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்க்க காரணம் என்னவென்றால் நீட் தேர்வில் அடுத்தடுத்து அவிழும் பிரச்சினையும், மோசடிகளும்தான்.

ஆம், நீட் தேர்வு எழுதிய 1,563 மாணவர்களுக்கு வழங்கிய கருணை மதிப்பெண், இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் செல்ல... நீதிமன்றமே ரத்து செய்துவிட்டது.

பீகாரில் நீட் வினாத்தாள் கசிந்தது, நீட் வினாத்தாள் 30 லட்சம் ரூபாய் முதல் 32 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது என பூதம் கிளம்பியது.

குஜராத்தில் 10 லட்சம் ரூபாய் கொடுத்தால், விடையை எழுதாமல் விட்டுவிடுங்கள் நாங்களே எழுதிவிடுவோம் என மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பம்பர் ஆஃபர் பதறச் செய்தது...

இந்த பிரச்சினைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் வெடிக்க, எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்க, சிபிஐ விசாரணையை தொடங்கி கைது வேட்டை தொடர்கிறது.

இவ்விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பிய எதிர்க்கட்சிகள் நீட் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் விடுத்தன. ஆனால் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என்றார் சபாநாயகர் ஓம் பிர்லா...

நீட் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசிய போது அனுமதி மறுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் அமளியால் அவை முடங்கியது..

திங்கள் கிழமை வரைக்கும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் பேசியபோதே அவரது மைக் அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் ஆவேசமானது.

இதற்கிடையே தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் கோரிய தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்....

மேற்கு வங்க முதல்வர் மம்தாவும், நீட் தேர்வு மோசடி செய்திகளை பட்டியலிட்டு, நீட் தேர்வை அகற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்ட ராகுல் காந்தி, நீட் வினாத்தாளில் பல கோடி ரூபாய்க்கு ஊழல் என குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சிகள் எல்லாம் கார்னர் செய்ய... அரசு விவாதத்திற்கு தயாராக இருக்கிறது என குறிப்பிட்ட மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்... சிபிஐ விசாரிக்கிறது யாரும் தப்ப முடியாது என்றார்.

என்ன ஆனாலும் சரி... விவாதிக்காமல் மத்திய அரசை விடமாட்டோம் என இந்தியா கூட்டணி விடாப்பிடியாக இருக்க தேசிய அளவில் நீட் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்