நாங்குநேரி விவகாரம் - நேரில் ஆறுதல் கூறிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்...
நெல்லை, நாங்குநேரியில் சாதிய பிரச்சனையால் தாக்குதலுக்கு ஆளான மாணவர் மற்றும் அவரது சகோதரியை, மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இதில் பாதிக்கப்பட்ட இருவரும் பாளையங்கோட்டை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வழிமுறைகள் காணப்படும் எனவும், கோவில்பட்டி அருகே கழுகுமலை பகுதியிலும் இது போன்று நடந்த சம்பவம் குறித்து ஆணையம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.