`பல்வால்' கேங் என்கவுன்ட்டர்... திடீர் திருப்பம்... இன்ஸ்பெக்ட்டர், SI இடம் நேரில் விசாரணை

Update: 2024-09-30 13:01 GMT

ஏ.டி.எம் கொள்ளையர்களை சுட்டுப்பிடித்த சம்பவம் தொடர்பாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரிடம், குற்றவியல் நீதிமன்ற நடுவர் நேரில் விசாரணை நடத்தினார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த வெப்படை அருகே, ஏ.டி.எம் கொள்ளையர்களை சுட்டுப் பிடித்தபோது போலீசார் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் மல்லசமுத்திரம் எஸ்.ஐ ரஞ்சித்குமார், பள்ளிப்பாளையம் ஆய்வாளர் தவமணி ஆகியோர் படுகாயமடைந்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரை, குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் மாலதி நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார். சம்பவம் குறித்தும், எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்