நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தனியார் உணவகம் ஒன்று, கெட்டுப்போன மீன்களை பதப்படுத்தி விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத்தில், தனபால் என்பவர் வறுத்த மீன் வாங்கியுள்ளார். வீட்டில் சென்று பார்த்தபோது, மீனில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து, உடனடியாக கடைக்கு வந்த தனபால், கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.