வீட்டுக்கு வந்து சென்ற காதலன் அன்றே உயிரை விட்ட காதலி - விசாரணையில் அதிர்ச்சி

Update: 2024-08-23 13:50 GMT

நாமக்கல்லில் கல்லூரி மாணவி தூ*குப்போட்டு த*கொலை செய்து கொண்ட நிலையில், த*கொலைக்கு தூண்டியதாக காதலன் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் எடக்கல்பட்டியை சேர்ந்தவர் பானுப்ரியா. கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்த இவர், நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிதம் படித்து வந்தார். ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்த பானுப்ரியா, கடந்த 20ஆம் தேதி தூ*குப்போட்டு த*கொலை செய்து கொண்டார். அவரது முகம், கைகளில் காயம் இருந்த நிலையில், எருமப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததும், சம்பவத்தன்று பானுப்ரியாவின் வீட்டிற்கு விக்னேஷ் வந்து சென்றதும் தெரிய வந்தது. மேலும், பானுப்ரியா வேறு ஒருவருடன் செல்போனில் பேசியதை கண்டித்ததால் தகராறு ஏற்பட்டதாக விக்னேஷ் கூறியுள்ளார். இதையடுத்து, பானுப்ரியாவை த*கொலைக்கு தூண்டியதாகக் கூறி, விக்னேஷை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்