சவாரியை முடிக்காமல் சவாரி செய்தவரை முடித்த ஓட்டுநர் - வெளியான பகீர் பின்னணி

Update: 2024-03-19 13:52 GMT

நாகர்கோயில் வடசேரி ஆம்னி பேருந்து நிலையம் அருகே, இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இளைஞரின் ஆடைகள் கிழிந்தும், உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்களும் இருந்ததால், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கொலை செய்யப்பட்ட நபர் பொழிக்கரை பகுதியை சேர்ந்த ராஜன் என தெரியவந்தது. செட்டிகுளம் பகுதியில் ஆட்டோவில் பயணம் செய்தபோது, சென்றபோது, அதில் பயணம் செய்த ராஜன் என்பவர், ஆட்டோவுக்கு வாடகை அளிக்காததோடு, ஆட்டோவை சேதப்படுத்தி, ஓட்டுநரை தகாத வார்த்தைகள் பேசியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநரின் உறவினர்களான மணிகண்டன் மற்றும் முருகன் ஆகியோர், ராஜனை தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்