செய்யப்பட்ட சம்பவத்தில் ஒரே நாளில் ஆறு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கருப்பம்புலம் கிராமத்தைச் சேர்ந்த சிவராசா. முன்னாள் ராணுவ வீரரான இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அவரது உறவினரான முருகானந்தத்திற்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த மார்ச் 7-ஆம் தேதி பைக்கில் சென்ற சிவராசா-வை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர். வழக்கில் தொடர்புடைய 6 பேரை தலைஞாயிறு அருகே தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். 6 பேர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை கஞ்சா, கள்ளச்சாராயம் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நாகை மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் தீனதயாளன், முருகானந்தன் உள்ளிட்ட 6 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையிலடைத்தனர்.