"பெண்களுடன் புல் சரக்கு" போதையில் காரை பறக்கவிட்ட MP மகன் -மடக்கி பிடித்த போலீஸ் -MP சொன்ன பரபரப்பு தகவல்

Update: 2024-02-24 15:26 GMT

மகாபலிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற கார் ஒன்று, பொதுமக்களை அச்சுறுத்துவது போல் சென்றதாகவும், திருக்கழுக்குன்றம் பைபாஸ் சாலையில் பைக்கில் சென்ற இளைஞர்கள் சிலரை இடித்து கீழே தள்ளியதாகவும் கூறப்படுகிறது. இதில் சிலர் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், பொதுமக்கள் பின் தொடர்ந்து வருவதை அறிந்த காரில் இருந்தவர்கள், காரை தாறுமாறாக இயக்கி... செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே தடுப்பு வேலிகளை உடைத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், காரை இயக்கியது சென்னை, கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞரும், திமுகவின் ராஜ்ய சபா எம்.பியுமான கிரிராஜனின் மகன் செந்தமிழன் என்பது தெரியவர, செந்தமிழனும் அவருடைய நண்பர்களும் காருக்குள் மதுபோதையில் இருந்ததாக கூறப்பட்டது பரபரப்பை மேலும் கூட்டியது. தொடர்ந்து விசாரணைக்காக அனைவரையும் போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்ற நிலையில், எம்.பியின் மகன் செந்தமிழன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி வைரலானது.

Tags:    

மேலும் செய்திகள்