ஊராட்சி நிதியில் ஒரு கோடிக்கு மேல் முறைகேடு...கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து முக்கிய முடிவு

Update: 2023-08-01 04:56 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் ஊராட்சி நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததாக, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கிராம மக்கள் புகார் அளித்தனர்.

கேளம்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த கண்ணன் என்பவர், இவர் கடந்த 2021 நவம்பர் மாதம் முதல் 2022 ஜூலை மாதம் வரை கேளம்பாக்கம் ஊராட்சியில் தீர்மான நகல்கள், வரவு செலவு கணக்குகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டுள்ளார். அதில் கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் வரி என்கிற பெயரில் வசூல் செய்து, அதனை ஊராட்சி நிதியில் வரவு வைக்காமல், கையாடல் செய்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள்,

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்