திருப்பூர், அவிநாசி, பல்லடம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதில், கருவம்பாளையம் மாகாளிம்மன் கோயில் அருகில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், ஒரு லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை, மாதச்சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளனர். இதனிடையே, சீட்டில் சேர்ந்த நபர்களுக்கு, செலுத்திய காலம் முடிந்தும், பணம் கொடுக்காமல் நிறுவன உரிமையாளர் மோசடி செய்ததாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தனியார் நிதி நிறுவன உரிமையாளர் கார்த்திக்கை கைது செய்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்