"மாணவர்களுக்கும் ரூ.1,000 வழங்கும் திட்டம்.." CM சொன்ன இனிப்பு நியூஸ் | MK Stalin | Thanthitv

Update: 2024-06-14 14:59 GMT

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் 10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும், தமிழில் நூற்றுக்கு நூறு எடுத்த மாணவர்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டினார்.

கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காலத்தில் பள்ளி கல்வித்துறை பொற்காலமாக விளங்குகிறது, அவர் பள்ளிக்கல்வித்துறையை உலகத்தரத்தில் கொண்டு செல்ல முயற்சி எடுத்து வருகிறார் என பாராட்டினார். நிதி நெருக்கடி இருந்தாலும் கல்வித்துறைக்கு புதுப்புது திட்டங்களை கொண்டு வருவதாக குறிப்பிட்டவர், மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது போல், மாணவர்களுக்கும் நிதி உதவி வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்டில் அமலுக்கு வரும் என்றார். மாணவர்களிடம் தான் எதிர்பார்ப்பது எல்லாம் நன்றாக படிக்க வேண்டும் என்பதைதான் என குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், நன்றாக படியுங்கள், படித்துக்கொண்டே இருங்கள், படிப்புக்கு முற்றுப்புள்ளி வரக்கூடாது, கமாதான் வரவேண்டும், கல்வி மட்டும்தான் திருட முடியாத சொத்து என்றும் அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்