மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் அணையில் இருந்து, 81 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது...
கர்நாடக அணைகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கான அதிகரித்து, அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து, அணை உபரி நீர் போக்கி வழியாக 60 ஆயிரம் கன அடியும், மேட்டூர் அணை மற்றும் சுரங்க மின் நிலையங்கள், கிழக்கு மேற்கு கரை கால்வாய் மூலம் 21 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீரானது16 கண் பாலம் அருகில் நீர்வீழ்ச்சி போல கொட்டும், அழகை ரசிக்க குவிந்த மேட்டூர் வாசிகள் தங்கமாபுரி பட்டம் பாலத்தில் குவிந்து வருவதால் போக்குவரத்து பாதித்துள்ளது,