மேட்டுப்பாளையம் டூ கோத்தகிரி சாலையில் மிக பெரிய அளவில் மண் சரிவு -சேற்றில் சிக்கிய அரசுப்பேருந்துகள்
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் விடிய விடிய பெய்த மழையால் மேட்டுப்பாளையம் டூ கோத்தகிரி மலைப்பாதையில், 6க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில் மேட்டுப்பாளையம் டூ கோத்தகிரி சாலையின் 2 வது கொண்டை ஊசி வளைவில் ஏற்பட்டுள்ள மண் சரிவு மிகப்பெரிய அளவில் உள்ளது. வனப்பகுதியில் இருந்த மரங்கள் மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு சாலையின் குறுக்கே விழுந்துள்ளது. மழைநீருடன் மண் சேர்ந்து அப்பகுதி முழுவதும் சேறாக காணப்படுகிறது. அதில் 2 அரசுப்பேருந்துகள் மற்றும் ஒரு லாரி சிக்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக அரசிப்பேருந்தில் பயணித்த பயணிகள் அசம்பாவிதம் எதுவும் இன்றி தப்பினர். இந்த மண்சரிவால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இரு புறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சாலையை சீரமைக்கும் பணியில், நெடுஞ்சாலை துறை மற்றும் அரசு போக்குவரத்து கழக துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.