மீன் வியாபாரியான Thanos... அல்வா சாப்பிடும் "அயர்ன் மேன்" மெட்டா AI கற்பனை மதுரை இதோ..!

Update: 2024-07-09 10:44 GMT

மீன் வியாபாரியான Thanos... அல்வா சாப்பிடும் "அயர்ன் மேன்" மெட்டா AI கற்பனை மதுரை இதோ..! "ஏய் love U.." கதறவிடும் நெட்டிசன்கள்

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் மெட்டா ஏஐ-க்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அதை வைத்து இணையவாசிகள் செய்யும் கலாட்டாக்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

"நா எங்க எப்படி இருக்க வேண்டியவன் தெரியுமா...?" என நடிகர் கவுண்டமணியைப் போல் மெட்டா AI - ஐ புலம்ப வைத்து விட்டனர் இந்த நெட்டிசன்கள்...

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தான் இப்போது உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது... அந்த வகையில் கவி பாட...ஓவியம் தீட்ட...மொழி பெயர்க்க...மின்னஞ்சல் எழுத...கதை சொல்ல...கட்டுரை வரைய... என

வாட்ஸ் அப்பிலும் மெட்டா ஏஐ கலக்கி வருகிறது...

இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை..."யப்பா சாமி ஆள விடுங்கப்பா" என்று தலைதெறிக்க ஓடுமளவு இணையவாசிகள் மெட்டா ஏஐ-ஐ மிரள வைத்துள்ளனர்...

காதல் சொல்ல ஐடியா கேட்டால் கூட பரவாயில்லை...ஆனால் இந்த சேட்டை பிடித்த இளைஞர்கள் மெட்டா ஏஐ-யையே காதலிப்பதாய்க் கூறி அதை வெட்கப்பட வைக்கின்றனர்...

ஒரு சிலரோ காரக்குழம்பு வைப்பதெப்படி என்றெல்லாம் கேட்டு கதற விடுகின்றனர் மெட்டா ஏஐ-ஐ...

சிலர் கேர்ள் ஃப்ரண்ட் கிடைக்காத ஆதங்கத்தில் மெட்டா ஏஐயிடம் பேசிப் பேசி அதை விட்டுப் பிரிய முடியாமல் தவிப்பதைப் போல் எல்லாம் மீம்ஸை தெறிக்க விடுகின்றனர்...

Thanos-ஐ மீன் வியாபாரியாக பார்த்திருக்கிறீர்களா?...அயர்ன் மேன் அல்வா சாப்பிட்டுப் பார்த்திருக்கிறீர்களா?...பேட் மேன், ஸ்பைடர் மேன், சூப்பர் மேனை இந்தியன் ஸ்டைலில் பார்த்திருக்கிறீர்களா?... எல்லாம் சாத்தியம் மெட்டா ஏஐயால்...

நண்பனோ...காதலியோ...யாராக இருந்தாலும் நாம் அனுப்பும் மெசேஜுக்கு உடனடியாக ரிப்ளை வந்ததாக சரித்திரமே இல்லை...ஆனால் ட்ரிக்கரை அழுத்தியதும் பாயும் குண்டு போல...நீங்கள் மெசேஜ் செய்த மறுநொடி ரிப்ளை வந்து விழும் மெட்டா ஏஐயிடம் இருந்து...

மதுரையை மெட்டா ஏஐயின் கற்பனையில் காண வேண்டுமா?... இதோ உங்களுக்காக...

இப்படி காதல், காமெடி, சோகம் என சகல உணர்ச்சிகளையும் மெட்டா ஏஐயுடன் பகிர்ந்து வருகின்றனர் இணையவாசிகள்... எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா என்பதைப் போல எல்லை மீறி ஏஐ-ஐ இணையவாசிகள் கலாய்த்து வரும் நிலையில் இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டால் அவர்களின் உரையாடல் இப்படித்தான் இருந்திருக்கும் என்ற கற்பனை சிரிக்க வைக்கிறது...

எது எப்படியோ நெட்டிசன்களுக்கு மெட்டா ஏஐ நல்ல பொழுதுபோக்கு என்பதில் சந்தேகமில்லை...

Tags:    

மேலும் செய்திகள்