மேல்மருவத்தூர் நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரம் - அடுத்தடுத்து பாய்ந்த உத்தரவு

Update: 2024-01-04 03:25 GMT

 மேல் மருவத்தூரில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு புகார் தொடர்பாக, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கமிஷன் ஆய்வு மேற்கொண்டது.

Vovt

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம், கீழ்மருவத்தூர் ஏரி, சோத்துப்பாக்கம் ஆகிய இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜா, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து, வருவாய்த் துறையினர் அளித்த அறிக்கையின்படி, மேல்மருவத்தூர், கீழ்மருவத்தூர், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, மேல்மருவத்தூரில் கட்டப்பட்ட அடிகளார் திருமண மண்டபம், இரு சக்கர வாகன காப்பகம், தேசிய நெடுஞ்சாலையொட்டி இருந்த கட்டடங்கள் ஆகியவற்றை வருவாய்த்துறையினர் அகற்றினர். ஆனால், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவில்லை எனக் கூறி சமூக ஆர்வலர் ராஜா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்ய வழக்கறிஞர் விசாரணை கமிஷனை நியமித்து உத்தரவிட்டது. அதன்படி, வழக்கறிஞர் கமிஷனைச் சேர்ந்தவர்கள், கீழ்மருவத்தூர் ஏரிப் பகுதியில் அளவிட்டு ஆய்வு மேற்கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்