மேட்ரிமோனியில் வரன் தேடுபவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி

Update: 2024-08-08 08:43 GMT

மேட்ரிமோனியில் வரன் தேடுபவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி

மேட்ரிமோனி மூலமாக பழகி திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த 43 வயது நிரம்பிய பெண் ஒருவர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அளித்த பேட்டியில், தனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளநிலையில் கணவர் இறந்துவிட்டதாகவும், தனியாக வசித்து வந்த என்னை தமிழ் மேட்ரிமோனியில் 2-வது திருமணத்துக்காக பதிவு செய்த நபர் ஒருவர் தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்தார். அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதுடன், பண மோசடியிலும் ஈடுபட்டதால் அவர் மீது குடியாத்தம் போலீசில் புகார் அளித்ததாகவும், இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்