மாமல்லபுரம் அருகே மீனவ கிராமத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவ கிராமத்தில், கழிவுநீர் தேங்குவதால் நோய் தொற்று ஏற்படுவதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கொக்கிலமேடு மீனவ பஞ்சாயத்தார் மீது ஊராட்சி துணைத்தலைவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பஞ்சாயத்தார், துணைத்தலைவரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர். இதனையடுத்து, அரசு தரப்பில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கிராம பஞ்சாயத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழலில் செவ்வாயன்று, இருதரப்பினரும் திடீரென மோதிக்கொண்டதால் பெண்கள் 2 பேர் உட்பட ஏராளமானோர் காயமடைந்தனர். இதனையடுத்து பாதுகாப்புக்காக கொக்கிலமேடு கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.