அமைச்சர் நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில் நடந்த சம்பவம் - தீயாய் பரவும் வீடியோ

Update: 2024-09-10 09:07 GMT

சிவகங்கையில் மகளிர் திட்டத்தின் சார்பில் கடன் வழங்கும் நிகழ்ச்சியின் போது, கடன் பெற்ற மகளிர் குழுக்களிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் கமிஷன் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள மகளிர் குழுக்களுக்கு, 65 கோடி ரூபாய் மதிப்பில் வங்கிகள் மூலம் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், கடன் தொகை பெற்ற குழுவினர், வட்டார ஒருங்கினைப்பாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் கமிஷனாக வழங்க வேண்டுமென நிர்பந்திக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும், இது தொடர்பான வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்