மூன்று மணி நேரமாக அடித்து ஊத்திய மழை...சாலைகளை மொத்தமாக சூழ்ந்த தண்ணீர் - பரபரப்பு காட்சிகள்
மதுரையில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய வீதிகளில் தண்ணீர் தேங்கியது. வேலை முடித்து வீட்டிற்குச் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். விரைவில் மழைக்காலம் துவங்க இருப்பதால் சேதமடைந்த சாலைகளைச் சரி செய்து, தண்ணீர் தேங்காமல் வழிவகை செய்து தர வேண்டும் என்பது மதுரை மக்களின் கோரிக்கையாக உள்ளது.