இரவு 12 மணிக்கு கள்ளழகர் எடுத்த அவதாரம்.. விடிய விடிய சிலிர்த்து நின்ற பக்தர்கள்
மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒருபகுதியாக விடிய விடிய தசாவதார கோலங்களில் எழுந்தருளியை கள்ளழகரை, பெருந்திரளான பக்தர்கள் கண்விழித்து தரிசனம் செய்தனர். நேற்று வண்டியூரில் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் காட்சி தந்து சாபவிமோசனம் வழங்கும் நிகழ்வு நடந்தது. பின் அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, நள்ளிரவு முதல் கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு முத்தங்கி சேவை அவதாரத்தில் தோன்றினார். இதை தொடர்ந்து மச்சவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம் எடுத்தார். கிருஷ்ண அவதாரம் எடுக்கும் போது விடிந்தது. சூரிய உதயத்தின் போது மோகினி அவதாரத்தில் தோன்றிய கள்ளழகர், ராமராயர் மண்டபத்திலிருந்து வெளியேவந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.