மதுரை நெல்பேட்டையில் வைகை ஆற்றங்கரையோரம் குவிக்கப்பட்ட இறைச்சிக் கழிவுகளால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உருவான நிலையில் அவற்றை அகற்றிய அதிகாரிகள் 5 இறைச்சிக் கடைகளுக்கு அபராதம் விதித்தனர்...
மதுரை நெல்பேட்டையில் அமைந்துள்ள இறைச்சி கடைகளில் சில கோழிகள், ஆடுகள், மாடுகளின் இறைச்சி கழிவுகளை முழுவதுமாக வைகையாற்று கரையோர சாலையில் மலை போல கொட்டிக் குவித்தனர்... கடும் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் நடமாடக்கூட முடியாத சூழல் உருவானது. இறைச்சி கழிவுகள் கலந்த மழைநீர் சாலைகளில் துர்நாற்றத்துடன் ஓடியதால் வாகன ஓட்டிகளும் மக்களும் அவதி அடைந்தனர்.