வீடு திரும்பாத நபர்- தேடி சென்றவர்களுக்கு பேரிடி -அரங்கேறிய அதிர்ச்சி - ஷாக்கில் உசிலம்பட்டி

Update: 2024-10-30 16:03 GMT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேர்வைபட்டியைச் சேர்ந்தவர் மாயன் என்பவர் இன்று அதிகாலை காளான் சேகரிக்க சென்றார். வெகு நேரமாகியும் வீடு திரும்பாத சூழலில், உறவினர்கள் அருகே உள்ள தோட்டத்து பகுதியில் தேடி உள்ளனர். மலை அடிவார பகுதியான வேப்பங்குளம் ஓடை அருகே மாயனின் உடல் காயங்களுடன் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் நிலைய போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காளான் சேகரிக்க சென்ற தோட்டத்து பகுதியில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என்றும், இறந்த உடலை மறைக்க சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேப்பங்குளம் ஓடை அருகே வீசி விட்டு சென்றது தெரிய வந்துள்ளது.,

உடலை மீட்டு உடற்கூராய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அருகே உள்ள தோட்டப் பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்