மதுரை உசிலம்பட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - பரபரப்பு CCTV காட்சிகள்

Update: 2024-07-08 05:30 GMT

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

அயோத்திபட்டியைச் சேர்ந்த தம்பதி பணராஜா மற்றும் சுதா. இவர்களில் பணராஜா பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் நிலையில், அவரது மனைவி சுதா விவசாய பணிகளை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சுதா வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். இதில், பீரோவில் இருந்த 23-அரை பவுன் தங்க நகைகள் மற்றும் 4 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்