கடைகளைக் கையகப்படுத்தும் முடிவு - போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்

Update: 2024-04-17 07:11 GMT

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிக்காக, வணிக வளாக கடைகளை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, 2,000 கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் நிலத்தை நகராட்சி நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டு கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றன. பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள 140 வணிக வளாக கடைகளையும் கையகப்படுத்தி, இடித்து விட்டு விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நகை கடை பஜார், ஜவுளிக்கடை பஜார், சந்தை கடைகள், தேனி ரோடு, பேரையூர் ரோடு, மதுரை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்