மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களில் பணிபுரியும் ஒவ்வொரு பில் கலெக்டர்களும், மாநகராட்சி பாஸ்வேர்டை முறைகேடாக பயன்படுத்தி கூடுதலாக வரி வசூலிக்க வேண்டிய கட்டிடங்களின் வரியினை, யாருடைய அனுமதியும் இன்றி குறைத்துள்ளதாக, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். ஒரு கட்டிடத்திற்கு வரி விதித்த பிறகு அந்த வரியை குறைக்க மாநகராட்சி ஆணையருக்கே அதிகாரம் கிடையாது என்றும், ஆனால், பில் கலெக்டர்கள் வரியை, சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை முறைகேடாக குறைத்து காட்டியுள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பான ஆய்வு கூட்டத்தில் இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பாஸ்வேர்டு வைத்து பல்வேறு முறைகேடுகளில் 5 பேரும் ஈடுபட வாய்ப்பு இருப்பதனால், சைபர் கிரைமில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.