மதுரை மாநகரில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. மாட்டுத்தாவணி, கே.கே. நகர், அண்ணா நகர், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. அப்போது, ஒத்தக்கடை யானை மலையில் திடீரென உருவான அருவியில் மக்கள் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்
காமராஜர் சாலையில் இருந்து கணேஷ் தியேட்டர் சிக்னல் சந்திப்பு வரை, மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். கனமழையால் சரவண பொய்கையில் மழை நீர் அருவி போல் கொட்டியது. இதனிடையே, மதுரை மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 21 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோல
மாவட்டம் முழுவதும் சராசரியாக 9.74 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.