மதுரை மல்லிகைப்பூ கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் பனிப்பொழிவால் மதுரை மல்லிகைப்பூ விளைச்சலுக்கான சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மல்லிகைப்பூ கிலோ 2000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ மற்றும் முல்லைப்பூ 1200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கனகாம்பரம் கிலோ 1000 ரூபாய்க்கும், அரளிப்பூ 200 ரூபாய்க்கும், பட்டன்ரோஸ் 120 ரூபாய்க்கும், செவ்வந்தி 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த சில வாரங்களுக்கு பூக்களின் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.