தீபாவளி முடிந்து ஊருக்கு கிளம்பியவர்களுக்கு அதிர்ச்சி.. புலம்பும் மதுரை மக்கள்
தீபாவளி முடிந்து ஊருக்கு கிளம்பியவர்களுக்கு அதிர்ச்சி.. புலம்பும் மதுரை மக்கள்
மதுரையில் இருந்து சென்னை செல்லும் பயணிகள், போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இல்லாததால் அவதி அடைந்தனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதே போன்று மதுரையில் இருந்து திருப்பூர், கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்வதற்காக மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த சிறப்பு பேருந்துகளில் பெரும்பான்மையான சீட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. இதனால், முன்பதிவு செய்யாமல் பேருந்து நிலையம் வந்த பயணிகள், பேருந்து கிடைக்காமல் திண்டாடினர். மாட்டுத்தாவணி தனியார் பேருந்து நிலையத்தில் இருந்து அதிகமான தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டது. ஆனால் அவற்றின் கட்டணம் சாமானிய மக்களுக்கு ஏற்ற வகையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.