சிக்கனுடன் சேர்த்து வண்டையும் "65" போட்ட உணவகம் - வெளியான பரபரப்பு வீடியோ | Madurai

Update: 2024-08-01 17:12 GMT

மதுரையில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட சிக்கன் 65க்குள் வண்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கேகே நகர் பகுதியில் இயங்கி வரும் உணவகத்தில் சட்டக்கல்லூரி மாணவிகள் சிலர் சிக்கன் 65 பார்சல் வாங்கியுள்ளனர். வீட்டிற்கு சென்று அதைப் பிரித்துப் பார்த்த போது சிக்கனுக்குள் வண்டு ஒன்று இறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த மாணவிகள் இதுகுறித்து கடைக்கு சென்று ஊழியர்களிடம் முறையிட்டனர்... ஆனால் அவர்கள் அலட்சியமாக பதிலளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது... இதையடுத்து வீடியோ ஆதாரத்துடன் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் புகாரளிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்