சாலையோர கடைகளில் வைக்கப்பட்டு இருப்பதை போல மதுரையில் பேருந்து ஒன்றில் ஒலிபெருக்கி வைக்கப்பட்டு பேருந்து செல்லும் இடங்கள் குறித்து அறிவிக்கப்படுகிறது.
மதுரை ஆரப்பாளையத்தில் நடத்துனர் ஒருவர் தான் பணியாற்றும் அரசு பேருந்தில் ஒலிபெருக்கி வைத்து, பேருந்து செல்லும் வழித்தடங்கள் குறித்து அறிவித்து வருகிறார். இது பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.