துபாயில் இருந்து பயணிகளுடன் நேற்று காலை 11.10-க்கு மதுரை விமான நிலையம் வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று மாலை 6.10 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதனால் துபாய் செல்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர். நள்ளிரவிலும் விமானம் புறப்படாததால் பயணிகள் வெளியில் தங்க ஏற்பாடு செய்வதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அதை ஏற்காத பயணிகள், விமான நிலையத்திலேயே நேற்று இரவு முழுவதும் தங்கியுள்ளனர். இந்நிலையில், விமானத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் கட்டணம் செலுத்தாததால் எரிபொருள் நிரப்பப்படவில்லை என்றும், அதனால் விமானம் புறப்பட தாமதமாகதாகவும் தகவல் வெளியானது. 20 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் விமான நிலையத்திலேயே காத்திருந்ததால் பரபரப்பு நிலவியது.