உயிர் சாட்சியாக இருக்கும் நிஜ பெண்.. நேரில் சென்று கொடுத்த வாக்கை காப்பாற்றிய மாரி செல்வராஜ்

Update: 2024-09-20 08:00 GMT

வாழை படத்தின் உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் நேரில் சென்று ஸ்கூட்டி ஒன்றைப் பரிசளித்தார்...மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இந்த படத்தில் வாழைத்தார் ஏற்றிச் செல்லும் லாரி கவிழ்ந்து அதன் மேல் பயணம் செய்த 19 பேர் உயிரிழந்த சம்பவத்தை வைத்து உருவானது தான் வாழை திரைப்படம்.

இந்த விபத்தில் மாரி செல்வராஜின் சொந்த ஊரான புளியங்குளத்தைச் சேர்ந்த 15 பேரும், அருகே உள்ள நாட்டார்குளத்தைச் சேர்ந்த 4 பேரும் என மொத்தம் 19 பேர் பலியாகினர்.இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

அதில் நாட்டார்குளத்தைச் சேர்ந்த பனிமாதா என்ற பெண்ணுக்கு 2 கால்கள் துண்டாகின.

இதுகுறித்து நமது தந்தி தொலைக்காட்சியில் வெளியானது.

இதையடுத்து பனி மாதாவுக்கு போனில் தொடர்பு கொண்டு பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் வேண்டிய உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார். இந்த நிலையில் பனிமாதாவின் வீட்டிற்கு நேரில் சென்ற இயக்குநர் மாரி செல்வராஜ் பனிமாதா விடுத்த கோரிக்கையின்படி மாற்றுத் திறனாளிகள் ஓட்டும் ஸ்கூட்டியைப் பரிசளித்தார். மேலும் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கி அவருடன் நீண்ட நேரம் உரையாடினார்... உதவிகளைப் பெற்றுக் கொண்ட பனிமாதா இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்