காதலன் ஏமாற்றியதாகக்கூறி வீடியோ பதிவிட்டு திருநங்கை தற்கொலை

Update: 2024-10-29 11:57 GMT

மாங்காடு அடுத்த மவுலிவாக்கம் பஜனை கோயில் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தவர் இசை என்ற சரன். திருநங்கையான இவர், கோடம்பாக்கத்தை சேர்ந்த கரன் என்பவருடன் காதல் வயப்பட்டு, கடந்த சில மாதங்களாக இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கரனுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததால், திருநங்கையான இசையை விட்டு பிரிந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இசை, தற்கொலை செய்வதாக சமூகவலைதளத்தில் வீடியோ பதிவிட்டார். சரன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், வெட்டப்போவதாக மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்