லாரி மீது மோதி அப்பளம் போல நொறுங்கிய அரசு பேருந்து... செங்கல்பட்டு அருகே பயங்கரம்
செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, சென்னை டூ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் பிளாஸ்டிக் கேன்களை ஏற்றிச் சென்ற லாரியின் பின்னால் மோதியது... இவ்விபத்தில் ஓட்டுநர், நடத்துநர், 2 பயணிகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்... உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.