15வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி சென்னை அடையாறில் உள்ள இளைஞர் விடுதியில் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். ஜார்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பழங்குடி இளைஞர்கள் மற்றும் CRPF, BSF துணை அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஹிந்தியில் பேசிய ஆளுநர், தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்பாக, தமிழில் உள்ள வாக்கியங்களை தெரிந்துகொள்ளுமாறு பிற மாநில பழங்குடியின இளைஞர்களை கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம் என்பதால், மற்ற மாநில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தமிழகத்திற்கு அனுப்புவதை பாதுகாப்பாக உணர்வதாக கூறினார். தமிழ்நாட்டின் கலாச்சாரம், மொழி, பண்பாடு ஆகியவற்றை தெரிந்துகொண்டு அனுபவம் பெறுங்கள் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை கூறினார்.