சிறையில் ஏற்பட்ட உணவு பற்றாக்குறை..தட்டிக்கேட்ட கைதிக்கு விழுந்த அடி..சிக்கலில் சிக்கிய காவலர்கள்
நாகையை சேர்ந்த ரோசரிகிரேட்டன் என்பவர், கொலை வழக்கு ஒன்றில் கைதாகி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சக கைதிகள் 20 பேருக்கு உணவு போதுமானதாக இல்லை என மத்திய சிறை நிர்வாகத்திடம் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கழுத்துப் பகுதி, கை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு, மூன்று நாட்களாக உணவு உண்ணாமல் மகன் இருப்பதாகவும், மகனின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரோசரிகிரேட்டனின் தந்தை கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.