பெட்ரோல் வாங்கி சென்ற நபர்.. கரி கட்டையாக மீட்பு.. சிதறிய ரத்தத்தால் குழம்பும் போலீஸ் | Thanthitv

Update: 2024-05-27 16:36 GMT

சூளகிரியை அடுத்த அட்டகுறுக்கி கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலை ஓரமாக பெட்ரோல் ஊற்றி எரிந்த நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக சூளகிரி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து விரைந்து சென்ற போலீசார், பாதி எரிந்த நிலையில் இருந்த உடலை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விசாரணை நடத்தியதில், இறந்த நபர், சூளகிரி அருகே உள்ள ஒட்டர்பாளையம் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் என்பது தெரியவந்தது. கிராணைட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த அவர், அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கி வந்தது, சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அங்கு ரத்தம் சிந்தியிருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது மது போதையில் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்