தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம்.. கிருஷ்ணகிரி விரையும் அதிகாரிகள்

Update: 2024-08-21 16:34 GMT

கிருஷ்ணகிரி பள்ளியில் பாலியல் தொல்லை விவகாரம் குறித்து, ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான குழுவினர் மாவட்ட ஆட்சியருடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர்.

கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து 15 நாட்களில் பரிந்துரை அறிக்கை அளிக்க, குழுவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று இரவு கிருஷ்ணகிரிக்கு செல்லும் ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான குழுவினர், மாவட்ட ஆட்சியருடன் நாளை ஆலோசனை நடத்துகின்றனர். தொடர்ந்து 2 நாட்கள் அங்கு முகாமிட்டு விசாரணை நடத்தும் குழுவினர், சென்னை திரும்பிய பின் பரிந்துரை அறிக்கையை தயார் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்