கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்.. வீடு தேடிவரும் கண்ணன், ராதை | Krishna Janmashtami
கிருஷ்ணர் அவதிரித்த நாளான இன்று, பல பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான, இந்த நாளில், பக்தர்கள் விரதம் இருந்து, கோயில்களில், சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். அந்த வகையில் வடமாநிலங்களில் பல இடங்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கிருஷ்ணர், கண்ணன், ராதை வேடமணிந்த குழந்தைகள், வீதிகளில் உலாவந்து கொண்டிருக்கின்றனர். மேலும், கிருஷ்ணன் சிலைகளும் அதிக அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. சில இடங்களில், வெண்ணெய் நிரம்பிய பானையை உடைக்கும் போட்டிகளை குழந்தைகளுக்காக நடத்தி வருகின்றனர்