தமிழகத்திகே முதல்முறையாக.. கோவை உக்கடத்தில் தான்.. மிதக்கும் ஹைவோல்ட்..!

Update: 2024-10-18 09:27 GMT

தமிழகத்திலேயே முதல் முதலாக, உக்கடம் பெரியகுளத்தில் சோலார் பேனல்கள் அமைத்து 140 கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில் உக்கடம் பெரியகுளத்தில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 140 கிலோவாட் திறன் கொண்ட மிதக்கும் சோலார் பேனல் மின்உற்பத்தி நிலையம் அமைக்க கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த குழுவுடன் இணைந்து இத்திட்டத்தை துவக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்தது. அதன்படி உக்கடம் குளத்தில் மிதக்கும் சோலார் பேனல் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி விரைவில் நிறைவுபெற்றதும், மின்உற்பத்தி துவங்கப்படும். இங்கு உற்பத்தியாகும் மின்சாரம், மாநகராட்சி நிர்வாக பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என இத்திட்ட பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்