மனைவியின் ஸ்கூட்டி நின்ற இடத்தை பார்த்ததும் கதறிய கணவன்.. கோவையில் அதிர்ச்சி
பொள்ளாச்சி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக தனது 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பொள்ளாச்சி அருகே தாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுகன்யா. இவருக்கும், கணவர் அருண்குமாருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளிக்கூடத்தில் படித்து வந்த தனது மகள் தனுஸ்ரீ மற்றும் மகன் அகிலனை அழைத்து வர, இருசக்கர வாகனத்தில் சென்ற சுகன்யா, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களை தேடிக்கொண்டு அருண்குமார் சென்ற போது, அதே பகுதியில் உள்ள கிணறு அருகே இருசக்கர வாகனம் நின்றுள்ளது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர், கிணற்றில் இறங்கி தேடி, 3 பேரையும் சடலமாக மீட்டனர். உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.