கொதிக்கும் எண்ணெயில் கை விட்ட நபர்..கையை அசைக்க முடியாமல் தவிப்பு -ஒரேநாளில் நடந்த பிளாஸ்டிக் சர்ஜரி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த சண்முகம், சமையல் கலைஞராக வேலை பார்த்து வருகிறார். தாராபுரம் பகுதியில் வேலை செய்த போது, எண்ணெயில் தெரியாமல் கையை விட்டதில் தோல் கருகி எலும்பு அசைக்க முடியாமல் அவதியடைந்தார். உடனடியாக சூலூர் அரசு மருத்துவமனையில் சண்முகத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டதோடு, கையை நன்கு அசைப்பதற்கு ஏதுவான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு மாவட்ட சுகாதார இணை இயக்குனர் ராஜசேகரன் பாராட்டினார். கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சைக்கு இணையாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக ராஜசேகரன்