கோவையில் குரூப் 2 தேர்வு எழுத வந்த தேர்வரிடம், காவலர் கெஞ்சியதால், தேர்வர் சோகத்துடன் திரும்பி சென்றார். கோவை தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் குரூப் 2 தேர்வழுத வேண்டிய இளம்பெண், 5 நிமிடங்கள் தாமதமாக சென்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் காலதாமதமாக வந்ததால் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர். தாமதத்திற்கு மன்னித்து தன்னை தேர்வு எழுத அனுமதிக்குமாறு இளம்பெண் மன்றாடினார். அங்கிருந்த காவலர் ஒருவர், தாமதமாக வந்தவர்களை உள்ளே அனுமதித்தால் தனது வேலையே போய்விடும் என்று கெஞ்சினார். இதனால் ஏமாற்றமடைந்த இளம்பெண், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.