நீர்நிலைகளில் குளிப்பவர்கள் மிக மிக ஜாக்கிரதை-மூக்கின் வழியே சென்று மூளையை தின்னும் எமன்..3 பேர் பலி

Update: 2024-07-07 04:43 GMT

கோழிக்கோட்டில் மீண்டும் அமீபிக் மூளை காய்ச்சல்

நோய் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில மாதங்களாக அமீபிக் மூளைக்

காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நீர்நிலைகளில் குளிக்கும் போது, தேங்கி நிற்கும் நீரில் இருக்கும் அமீபா, மூக்கின் வழியாக மனித உட லுக்குள் சென்று மூளையை தாக்கி, அமீபிக் மூளை காய்ச்சல் ஏற்பட்டு, மரணம் சம்பவிக்கிறது. கேரளாவில் கண்ணூரில்

13 வயது சிறுமியும், மலப்புரத்தில் 5 வயது சிறுமியும், கோழிக்கோட்டில் 12 வயது சிறுவனும் ஏற்கனவே இந்த நோய் தாக்கி இறந்துள்ளனர். தற்போது கோழிக்கோடு திக்கொய் பகுதியைச் மாணவனுக்கு அமீபிக் மூளைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனியார்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு மாதங்களில் மாநிலத்தில் உறுதிசெய்யப்பட்ட நான்காவது நோய் தாக்குதல் இதுவாகும். இதனால் சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்